News Just In

11/20/2024 11:50:00 AM

கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் "வளர்ந்தவர்களுக்கான ஏப்புவலி டிப்தீரியா " தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு!

கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் "வளர்ந்தவர்களுக்கான ஏப்புவலி டிப்தீரியா " தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு


மாளிகைக்காடு செய்தியாளர்

பாடசாலை மாணவர்களுக்கு "வளர்ந்தவர்களுக்கான ஏப்புவலி டிப்தீரியா " தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் இன்று (20) நடைபெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி இஸட்.சரப்டீன் அவர்களின் ஆலோசனைக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், உத்தியோகத்தர்கள் பலரும் இந்த தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தில் இணைந்து கொண்டனர்.

கல்முனை கமு/கமு/அஸ்கர் வித்தியாலய அதிபர் ஏ.எச். அலி அக்பர் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் மாணவர்கள், மாணவிகள் தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.

No comments: