News Just In

11/14/2024 06:42:00 PM

காத்தான்குடியில் வயதான தாயை ஏமாற்றிய தேர்தல் அதிகாரி; சின்னத்தை மாற்றி வாக்களிப்பு

காத்தான்குடியில் வயதான தாயை ஏமாற்றிய தேர்தல் அதிகாரி; சின்னத்தை மாற்றி வாக்களிப்பு!





காத்தான்குடி ‘ஹிஸ்புல்லாஹ்’ பாலர் பாடசாலை வாக்களிப்பு நிலையம் ஒன்றில் இன்று காலை வயதான தாய் ஒருவர் வாக்களிக்க சென்று அதிகாரி ஒருவரிடன் உதவி கோரியுள்ளார்.

அங்கு அவர் ‘மரம்’ சின்னத்திற்கு வாக்களித்து தருமாறு உதவி கோரியபோது அங்கிருந்த தேர்தல் பணி அதிகாரி ஒருவர் சங்கு சின்னத்திற்கு வாக்களித்து கொடுத்துள்ளார்.இதன்போது தேர்தல் அதிகாரி தனது கோரிக்கைக்கு மாறு செய்வதை அவதானித்த அந்த தாய் உடனடியாக அங்கிருந்த ஏனைய அதிகாரிகளுக்கு அதனை தெரியப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து மோசடி செய்த தமிழ் அதிகாரியை பொலிசார் கைது செய்தனர்.

No comments: