News Just In

11/05/2024 06:47:00 AM

அநுரவால் 24 மணித்தியாலத்திற்குள் பறிக்கப்பட்ட தமிழ் அதிகாரியின் பதவி!

அநுரவால் 24 மணித்தியாலத்திற்குள் பறிக்கப்பட்ட தமிழ் அதிகாரியின் பதவி


பனை அபிவிருத்திச் சபையின் தலைவராக எனக்கு பதவி வழங்கப்பட்டிருந்தது. அந்த பதவியை நான் பொறுப்பேற்ற சிறிது நேரத்திற்குள் என்னுடைய பதவி இரத்துச் செய்யப்பட்டது என்று முன்னாள் நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸ் (Selvin Irenias) தெரிவித்தார்.

 நிகழ்ச்சியொன்றில்  கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், பதவியை பொறுப்பேற்கும் போது, ஒரு நாள் முதல்வர் போல இந்த பதவி தற்காலிகமானதுதான் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், அமைச்சர் கையொப்பமிட்டு வந்த அனுமதிக் கடிதத்தை அமைச்சர் தான் இரத்துச் செய்ய வேண்டும். எனக்கு அனுமதி கடிதம் கிடைத்த பின்னர் வேலை நாள் ஒன்றும் இருந்தது.அப்போதே அறிவித்திருக்கலாம். ஆனால் நான் பொறுப்பேற்றதன் பின்னரே எனக்கு அறிவிக்கப்பட்டது என்றும் செல்வின் இரேணியஸ் குறிப்பிட்டார்.

No comments: