News Just In

11/12/2024 07:23:00 PM

2025ஆம் ஆண்டு சனிபகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்!


2025ஆம் ஆண்டு சனிபகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள்



2025 ஆம் ஆண்டு முதல், சனி பகவானின் அருளால் ஒரு சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகளை கொடுக்க போகிறது.அப்படியாக கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக சனி கிரகம் இருக்கிறது. சனிபகவான் எப்பொழுதும் ஒருவர் செய்த பாவம் புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை கொடுப்பார்.

அடுத்த வருடம் சனி பகவானின் அருளால் மூன்று ராசிகள் அமோக பலனை பெறப்போகிறார்கள்.ஏனெனில் அடுத்த வருடம் சனி மீன ராசியில் பிரவேசிக்கிறார். அந்த மூன்று ராசிகள் யாரெல்லாம் என்று பார்க்கலாம்.

மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சி எதிர்பாராத மாற்றத்தை கொடுக்க இருக்கிறது.சனி 2 ஆம் வீட்டிற்கு அதிபதியாக 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார்.அதனால் மகர ராசிக்காரர்கள் ஏழரைச் சனியிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் நிறைய சந்தோஷத்தை பெற இருக்கிறார்கள்.பொதுவாக ஏழரை சனி காலத்தில் எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறாரோ அவ்வளவு நன்மையும் செய்வார்.ஆதலால் தான் சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்பார்கள்.

கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு சனிப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக அமையப்போகிறது.சனி 7 மற்றும் 8 ஆம் வீட்டிற்கு அதிபதியாக 9 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார்.அதன் காரணத்தால் கடக ராசிக்காரர்களுக்கு நீண்ட காலம் சனியால் ஏற்பட்ட பாதிப்பு விலகி முன்னேற்ற பாதையை அடையப்போகிறார்கள்.மேலும் பல நாள் தடைபட்ட காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

ரிஷப ராசி
சனி ரிஷப ராசிக்கு 9 மற்றும் 10 ஆம் வீட்டிற்கு அதிபதியாக 11 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார். இதன் விளைவாக, ரிஷப ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு ராஜ வாழ்க்கையை தர காத்து இருக்கிறது.சனி கிரகத்தின் நேர்மறையான பார்வையால் பல வாய்ப்புகள் தேடி வரும்.உயர் அதிகாரிகளால் உதவி கிடைக்கும்.வணிகர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு அடுத்த ஆண்டு மிகவும் நல்லது.பண தட்டுப்பாடு இல்லாமல் வாழ்கை பயணம் சுமுகமாக அமையும்.

No comments: