News Just In

10/24/2024 07:14:00 PM

தேர்தல் முடிவுகள் வித்தியாசமாகவே அமையும்!

தேர்தல் முடிவுகள் வித்தியாசமாகவே அமையும்!



மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கி இருப்பதால் மிகவும் போட்டித் தன்மை காணபடுகிறது. மக்கள் புதியவர்களே விரும்புவதால் இவர்களிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. அதேவேளை எமது கட்சி நாடளாவிய ரீதியில் நான்கு ஆசங்களை கைப்பற்றும் என ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைமை வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான் தெரிவித்தார்.

ஏறாவூரில் நேற்று (23) இடம்பெற்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எமது கட்சி கண் சின்னத்திலும் ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் இணைந்து போட்டியிடுகின்றோம்.

பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு எமது ஆதரவினை வழங்குவோம். இதன் மூலம் நாட்டு மக்களின் எதிர்காலத்தினை செழிப்பாக மாறுவதற்கு நாம் உதவியாக இருப்போம். அதேவேளை மாவட்டத்தில் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்றவற்றில் காணப்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வது எமது குறிக்கோளாகும் என தெரிவித்தார்

No comments: