News Just In

10/21/2024 10:27:00 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அநுர அரசுக்கும் தொடர்பா..?பேராயர் அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அநுர அரசுக்கும் தொடர்பா..! பேராயர் அதிர்ச்சி தகவல்



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு கடந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் இரண்டு அறிக்கைகள் தம்மிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் (cardinal malcolm ranjith) தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த அறிக்கைகளில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதே பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன என்று கூறிய அவர், அந்த குழு அறிக்கையில் கூடுதலாக இரண்டு பரிந்துரைகளை சேர்த்துள்ளதாக கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தில் இரண்டு அதிகாரிகள்

தற்போதைய அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகிக்கும் இரண்டு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைகள் சுட்டிக்காட்டுவதாக கூறிய பேராயர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கைகள் ஒவ்வொரு அரசாங்கத்தின் அரசியல் ஆதாயத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணை

அதில் எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தற்போதைய ஜனாதிபதி இது தொடர்பில் பக்கச்சார்பற்ற நீதியான விசாரணையை மேற்கொள்வார் எனவும் அதற்காக கண்களை திறந்து காத்திருப்பதாகவும் பேராயர் மேலும் தெரிவித்தார்.






No comments: