News Just In

10/16/2024 06:50:00 AM

சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி திடீரென இலங்கை திரும்புகிறார்..!

சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி திடீரென இலங்கை திரும்புகிறார்..!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றதுமே நாட்டை விட்டு வெளியேறி சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்த புலனாய்வு அதிகாரி நிசாந்த டி சில்வா மீண்டும் நாட்டிற்கு திரும்பவுள்ளதாக புலனாய்வு செய்தியாளர் எம். எம். நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அநுர அரசாங்கத்தில், நிசாந்த டி சில்வாவிற்கு ஒருவருட கால பதவி ஒன்றும் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிசாந்த டி சில்வாவிற்கும் சானி அபேசேகரவிற்கும், நீண்ட தொடர்பு இருக்கின்றது.இருவரும்பலவழக்குகளைநேரடியாகவேகையாண்டிருக்கின்றார்கள்.

இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச பதவியேற்பதற்கு ஒரு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு நிசாந்த டி சில்வா வெளியேறியிருந்தார்.

இவ்வாறிருக்கையில், தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டாலும் நாட்டில் இடம்பெற்ற ஏனைய முக்கிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சானி அபேசேகரவின் கீழான குழு விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றது.

No comments: