News Just In

10/25/2024 07:50:00 PM

மட்டக்களப்பு ஏறாவூரில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு ஏறாவூரில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு



மட்டக்களப்பு ஏறாவூர் குடியிருப்பு பிரதேசத்தில் ரயிலுடன் மோதி 32 வயதுடைய நபர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 8.25 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவர் மனநோயாளி என தெரிவிக்கப்படுகிறது. ஏறாவூரைச் சேர்ந்த எம்.என்.எம். முஜாஹித் என்பவரே மரணமடைந்தவரென அடையாளங் காணப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த வேளை இவர் திடீரென தண்டவாளத்தில் பாய்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த வேளை திடீர் மரண விசாரணையதிகாரி.எம்.எஸ்.எம் நசிர் அங்கு சென்று பார்வையிட்டு முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்

No comments: