News Just In

10/20/2024 03:12:00 PM

வடக்கு ரயில் சேவை பாதை திறப்பு தாமதம்!

மஹவ – அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் சேவை பாதை திறப்பு தாமதம்!




புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள வடக்கு ரயில் சேவையின் மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான பகுதி, ரயில்களை இயக்குவதற்கு தேவையைான தரத்தை பூர்த்தி செய்யாத காரணத்தினால், அந்தப் பாதையூடான ரயில் சேவை இயக்கத்தை ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது பூர்த்தி செய்யப்பட்ட இப் பாதையூடான, ரயில் சேவைகள் நாளை முதல் பொது மக்களின் தேவைக்காக மீண்டும் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள் 300 மில்லியன் ரூபா செலவில் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த செப்டெம்பர் 12 ஆம் திகதி குறித்த புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ரயில்வே திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

புனரமைப்பின் பிரகாரம் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் ரயில் பயணிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இதன்படி, நாளை முதல் இந்த பாதையை பொது உடமைக்கு வழங்க ரயில்வே திணைக்களம் தயாராகியிருந்த போதிலும், ரயில்வே சேவைக்கு தேவையான தரத்தை பூர்த்தி செய்யாத காரணத்தினால் இந்த பாதையை பொது உடமைக்கு வழங்குவதை ஒத்திவைக்க திணைக்களம் தீர்மானித்துள்ளது

No comments: