யாழ் வணிகர் கழகத்தினரை சந்தித்த சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர்கள்..!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் "மாம்பழம் சின்னத்தில்" சுயேட்சை குழுவாக போட்டியிடவுள்ள சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இன்றையதினம்(15) யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தை சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் நேற்று (15) பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, யாழ்ப்பாணம் வணிகர் கழக தலைவர் இ.ஜெயசேகரம் , தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவண்பவன், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், விமலேஸ்வரி ஶ்ரீகாந்தாரூபன், வணிகர் கழக அங்கத்தவர்கள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டிருந்தனர்.
10/16/2024 07:06:00 AM
யாழ் வணிகர் கழகத்தினரை சந்தித்த சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் வேட்பாளர்கள்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: