News Just In

10/25/2024 10:55:00 AM

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழர்கள் வெளிப்படுத்தும் அரசியல் தீர்வுசார் நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்படோம் - அமெரிக்கத்தூதுவர் உறுதி

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழர்கள் வெளிப்படுத்தும் அரசியல் தீர்வுசார் நிலைப்பாட்டுக்கு எதிராக செயற்படோம் - கஜேந்திரகுமாரிடம் அமெரிக்கத்தூதுவர் உறுதி


எதிர்வரும் பொதுத்தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக தாம் ஒருபோதும் செயற்படமாட்டோம் என இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் உறுதியளித்துள்ளார்.

வட மாகாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை (24) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திண்ணை ஹோட்டலில் நடைபெற்றது.

No comments: