News Just In

10/15/2024 06:35:00 PM

வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தால், மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு!

வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தால், மட்டக்களப்பு மாவட்ட வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு!




வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்தின் நிதி உதவியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 15 வைத்தியசாலைகளுக்கும் மருத்துவ
உபகரணங்கள் வழங்கப்பட்டன.



மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு தொடர்பில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரன் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கினங்க, வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவனம் சுமார் 3 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களைக் கையளித்துள்ளது.

வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவன தலைவரும் நிறுவன ஸ்தாபகருமான ரஞ்சன் சிவஞானசுந்தரம், மாவட்ட பிரதேச வைத்தியசாலைகள் மற்றும் ஆதாரவைத்தியசாலைகளின் பொறுப்பு வைத்திய அதிகாரிகளிடம் உபகரணங்களைக் கையளித்தார் இரண்டு ஆதார வைத்தியசாலைகளுக்கும் 13 பிரதேச வைத்தியசாலைகளுக்குமே இவ் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வைத்தியசாலைகளுக்கான வைத்திய உபகரணங்கள் மற்றும் ஆவணங்களைக் கையளிக்கும் நிகழ்வில் வன்னி ஹோப் அவுஸ்ரேலியா நிறுவன பணிப்பாளர் எஸ்.பிரதாபன் மற்றும் காயத்திரி பிரதாபன் ,கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் கே.தவசீலன் .மட்டக்களப்பு ,அம்பாறை இணைப்பாளர் கே.தர்மராஜா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

No comments: