News Just In

10/22/2024 09:48:00 AM

பணம் செலுத்துமாறு வரும் அழைப்புக்கள் - இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பணம் செலுத்துமாறு வரும் அழைப்புக்கள் - இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை




இஸ்ரேலில் வேலை தேடுபவர்களிடம் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பணமோசடி செய்யும் நடவடிக்கை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் வேலை எதிர்ப்பார்த்துள்ளவர்களுக்கு பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணம் செலுத்தியுள்ள இஸ்ரேலில் தொழில் எதிர்ப்பார்த்துள்ளவர்கள் எவரும் மீண்டும் பணம் செலுத்தத் தேவையில்லை என சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மூலம் 14,700 ரூபாவை செலுத்துமாறு குறிப்பிட்ட நபரால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது

No comments: