News Just In

9/17/2024 07:38:00 PM

மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டட நிர்மாண பணிகளை முடிவுறுத்தி மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

ஆசியாவின் பிரம்மாண்டங்களுள் ஒன்றாக மிளிரவிருக்கும் மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டட நிர்மாணப் பணிகளை முடிவுறுத்தி மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல்


(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஆசியாவின் பிரம்மாண்டங்களுள் ஒன்றாக அமையவிருக்கும் மட்டக்களப்பு பொது நூலகத்தின் கட்டட நிர்மாணப் பணிகளை முடிவுறுத்தி மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

அந்தவகையில் உலகளாவிய தரத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய நூலகத்தின் உட்கட்டுமான அமைப்புக்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளுக்கு விசேட ஆலோசனைகள் வழங்கும் நோக்கோடு ஈழத்து நூலகவியலாளரும், ஆய்வாளரும், பதிப்பாளருமாகிய திரு. என். செல்வராஜா அவர்களை மட்டக்களப்பிற்கு வரவளைத்து பல ஆக்கபூர்வமான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மட்டக்களப்பு நூலக புத்தக வள ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டிலும், திரு. என். செல்வராஜா அவர்களின் தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த குறித்த கலந்துரையாடலின் போது இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்,வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மாநகர சபையின் பொறியியலாளர்கள் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: