(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் கல்முனை முஹம்மதியா ஜும்ஆப் பள்ளிவாசல்" உதிரம் கொடுத்து உயிர் காப்போம்" எனும் தொனிப்பொருளில் இரத்ததான நிகழ்வு கடந்த ஞாயிறு (15) இடம்பெற்றது.
டாக்டர் ஏ .ஆர். ஏ .ஹாரிஸ் தலைமையில் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் அதிகளவிலான குருதிக் கொடையாளர்கள் இரத்தம் வழங்கினார்கள்.
No comments: