News Just In

9/22/2024 10:35:00 AM

யாழ்.மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள்!கோப்பாய்





நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் கோப்பாய் தேர்தல் தொகுதியின் வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12,639 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 11,410 வாக்குகளை பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,654 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அநுரகுமார திஸாநாயக்க 2,541 வாக்குகளை பெற்றுள்ளார்.

இந்த தேர்தல் தொகுதியில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 62,449 ஆகும்.

2,817 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 37,287 ஆகும்.

மேலும், அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 40,104 ஆகும்

No comments: