
(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பாடசாலைகள் டென்னிஸ் சங்கம் நடாத்திய 13 வயதுக்கு உட்பட்ட அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய டென்னிஸ் சுற்றுப்போடியில் ஆண்களுக்கான பிரிவில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி வெற்றி வாகை சூடி சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.
புனித மிக்கேல் அணியினர் இலங்கையின் பிரபல பாடசாலைகளான கொழும்புரோயல் கல்லுரி , கொழும்பு ஸாஹிராக் கல்லூரி, காலி ரிச்மென்ட் கல்லூரி என்பவற்றை முதல் சுற்றில் வென்று, அரை இறுதியில் கொழும்பு தேஸ்டன் கல்லூரியை வென்று, இறுதி போட்டியில் குருநாகல் மலிய தேவ கல்லுரியை வென்று சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது.
No comments: