News Just In

9/25/2024 02:38:00 PM

ஆய்வு கூட உதவியாளர் ஐ.எல்.எம். தஸ்தகீர் பாடசாலை கல்வி சமூகத்தால் பாராட்டி கெளரவிப்பு!

அரச சேவையில் 32 வருடங்கள் சேவையாற்றி ஓய்வு பெற்ற நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலை ஆய்வு கூட உதவியாளர் ஐ.எல்.எம். தஸ்தகீர் பாடசாலை கல்வி சமூகத்தால் பாராட்டி கெளரவிப்பு


(அஸ்ஹர் இப்றாஹிம்)
நிந்தவூர் அல் அஸ்றக் தேசிய பாடசாலையில் ஆய்வு கூட உதவியாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஐ.எல்.எம்.தஸ்தகீர் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் கபூர் தலைமையில் பாடசாலை காசிமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவர் 1992.07.12 ஆம் திகதி தனது ஆய்வு கூட உதவியாளர் நியமனத்தின் மூலம் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் கடமையாற்றி 2018 ஆம் ஆண்டு இடமாற்றம் மூலம் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு வருகை தந்து தனது பணியினை சிறப்பாக மேற்கொண்டு அண்மையில் ஓய்வு நிலையினை அடைந்தார்.

இந் நிகழ்வில் ஐ.எல்.எம்.தஸ்தகீர் அவர்களுக்கு பாடசாலை அதிபரினால் பொன்னாடை போர்த்தி , வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டு நினைவுச் சின்னம் , பொற்கிளியும் பாடசாலையின் முதல்வர் மூலம் பாடசாலையின் நலன்புரி அமைப்பான அஸ்வாவினூடாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் அவரின் பாரியார், பிள்ளைகள்,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


No comments: