News Just In

9/12/2024 07:13:00 PM

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக Air- Ship சேவை!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உடன்படிக்கை கைச்சாத்து




(அஸ்ஹர் இப்றாஹிம்)
தெற்காசியாவில் முதன் முறையாக இலங்கை யில் Air- Ship சேவையை ஆரம்பிக்கும் ஒப்பந்தம் சர்வதேச Air Space நிறுவனத்தின்
தலைவர் ஷுகரேவ் செர்ஜி நிகோலாவிச்க்கும், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கும் இடையில் (12) ஆளுநர் தலைமையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

திருகோணமலையில் உள்ள நிலாவெளி,மட்டக்களப்பில் உள்ள பாசிக்குடா, அம்பாறையில் உள்ள அரறுகம்பே போன்ற சுற்றுலா தளங்களின் இயற்கை அழகை ரசிக்கும் வகையிலும், பயணத்தை இலகுபடுத்தும் நோக்கிலும் பறக்கும் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வேலைத்திட்டமானது எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments: