News Just In

9/16/2024 02:13:00 PM

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் 189 புள்ளிகளைப் பெற்று பட்டிருப்பு கல்வி வலயம் முதலிடம்!


(அஸ்ஹர் இப்றாஹிம்)
இம்முறை நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண மட்ட போட்டிகளின் பட்டிருப்பு கல்வி வலயம் மீண்டும் சாம்பியனாக தெரிவு
28 தங்கப் பதக்கங்களுடன் 189 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டு.

பட்டிருப்பு கல்வி வலய பாடசாலைகள் அடிப்படையில்
95 புள்ளிகளுடன் களுதாவளை மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) 95 புள்ளிகளையும்,செட்டிபாளையம் மகா வித்தியாலயம் 58 புள்ளிகளையும், மண்டூர் சக்தி மகா வித்தியாலயம் 18 புள்ளிகளையும், .பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலம் 5 புள்ளிகளையும் மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம் 5 புள்ளிகளையும், மண்டூர் விக்னேஸ்வரா மகா வித்தியாலம் 5 புள்ளிகளையும் .03 தேற்றாத்தீவு மகா வித்தியாலயம் 3 புள்ளிகளையும்,கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயம் 1 புள்ளியையும் பெற்றுக் கொண்டன.

பதக்கப்பட்டியலில் அடிப்படையில்
12 தங்கப்பதக்கங்களுடன் களுதாவளை மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை )முதலாம் இடத்தையும்,10 தங்கப்பதக்கங்களுடன் செட்டிபாளையம் மகா வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும்,
03 தங்கப்பதக்கங்களுடன் மண்டூர் 14 சக்தி மகா வித்தியாலயம்
மூன்றாவது இடத்தையும் ,பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம்,.மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலயம் . மண்டூர் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் ஆகியன தலா 1 தங்கப்பதக்கத்தையும் பெற்றுக்கொண்டன.

No comments: