மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கன்னங்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு விழா நேற்று மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வியிலும் விளையாட்டுக்களிலும் சாதனை படைத்து வரும் கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் 135வது பாடசாலை தினத்தை முன்னிட்டு நடைபவனி ஓன்றும் நேற்று காலை இடம் பெற்றது.
பாடசாலையின் அதிபர் தங்கராசா கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பாடசாலை தினத்தை நினைவு கூரும் வகையில் 135 வது ஆண்டு விழா கேக் வெட்டப்பட்டு, அதனைத் தொடர்ந்து நடை பவனியானது ஆரம்பமாகியது.நடைபவனி கன்னங்குடா ஊர் ஊடாக சென்று தொடர்ந்து மண்டபத்தடி வழியாக கரையாக்கந்தீவு, தாண்டியடி, படுத்திச்சேனை , குறிஞ்சாமுனை சென்று மீண்டும் கன்னங்குடா பாடசாலையை வந்தடைந்தது.
பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர். நடைபவனியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாகவும் சுற்றாடல் பாதுகாப்பு, கலை கலாசாரம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை பற்றி விழிப்புணர்வூட்டும் பதாதைகள் மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டதுடன், கலை கலாசார நிகழ்வுகளை பிரதிபலிக்கும் மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் இடம்பெற்ற நடைபவனியில் வாகன பேரணியும் இடம் பெற்றிருந்தது.
பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக இடம்பெற்ற பாடசாலை தின நடைபவனியில் பாடசாலையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அதிபர்கள் மற்றும் கொடையாளிகள்உள்ளிட்டோரின்உருவப்படங்கள்காட்சிப்படுத்த்தப்பட்டிருந்தது.இன்றைய தினம் பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வும் இடம் பெற்றது
No comments: