News Just In

8/03/2024 11:33:00 AM

மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு!




மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு உலக தமிழர்களினை ஒருங்கிணைக்கும் வகையில் இன்றைய தினம் கோலாகலமாக ஆரம்பமாகியது.கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை இணைந்து உலக தமிழ் கலை இலக்கிய மாநாட்டினை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு அரசடி கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை இதன்போது திறந்து வைக்கப்பட்டது. தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரியங்களையும் மட்டக்களப்பின் தனித்துவ அடையாளங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான பண்பாட்டு ஊர்திகள் மற்றும் மாணவர்களின் நடை பவணியானது இடம்பெற்றது.

நிகழ்வில் மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோசி சரணவன், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் வ.கனகசிங்கம், எழுத்தாளர் சுவிஸ் நாட்டை சேர்ந்த கல்லாறு சதீஸ் உட்பட இலங்கை, தமிழ் நாடு மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து வருகைதந்த எழுத்தாளர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வில் மட்டக்களப்பில் உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு தொடர்பான நூல், மட்டக்களப்பு ஆய்வு நூலும்இலங்கை அஞ்சல் திணைக்களத்தினால் முத்திரையொன்றும் வெளியீடப்பட்டது.

No comments: