(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு,பட்டிருப்பு கண்டுமணி மகா வித்தியாலயத்திற்கு மாணவர்களின் நன்மை கருதி மேற்கத்திய பாண்ட வாத்தியக் கருவிகள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு அண்மையில் (5)நடைபெற்றது.
பாடசாலை அதிபர் வே. யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாண்ட் வாத்திய கருவிகளை கையளித்தார்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments: