News Just In

8/16/2024 10:21:00 AM

கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அறபுக்கலாபீட நிர்வாகிகளின் கலந்துரையாடல்!



(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அறபுக் கலாபீட நிர்வாகிகள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பு கலாபீட காரியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்கா ஷரீப் நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டதோடு, ஜாமிஆவின் கடந்தகால சேவைகள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் நன்றியுடன் நினைவு கூறப்பட்டதோடு எதிர்காலத்தில் ஜாமிஆவின் பணிகளும் பங்களிப்புகளும் கல்முனை மண்ணிற்கான அவசிய நிலைகள் பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.

கல்முனை பிரதேசத்தின் இருபெரும் பள்ளிவாசல்களுடன் ஜாமிஆ கலாபீடம் இணைந்து வெகுவிரைவில் வேகமான முன்னேற்றங்களை அடைவதற்கான விருப்பங்கள் அனைவருக்கும் மத்தியில் உடன்பாடு காணப்பட்டன.

No comments: