News Just In

8/27/2024 04:36:00 PM

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அலுவலகர்களுக்கு, தெளிவூட்டும் செயலமர்வு!





மட்டக்களப்பு மாவட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளில் ஈடுபடும் அலுவலகர்களுக்கு, தேர்தல் நடைமுறைகள் தொடர்பில் தெளிவூட்டும் செயலமர்வுகள் தொடர்ச்சியாக நடாத்தப்படுகிறது.

கனிஸ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று, மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.



மாவட்ட உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சுபியானின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற செயலமர்வில், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள உத்தியோகத்தர்கள் பலரும் பங்கெடுத்தனர்.

No comments: