News Just In

7/23/2024 03:34:00 PM

சாய்ந்தமருது ரியாழுல் ஜன்னா வித்தியாலய தளபாட கொள்வனவுக்கு திகாமடுல்ல மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் நிதி ஒதுக்கீடு!


(எம்.எம்.றம்ஸீன்)

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். எம்.ஹரீஸ் அவர்களின் டி-100 வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் விசேட நிதி ஒதுக்கீட்டில் பயனாக கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது ரியாழுல் ஜன்னா வித்தியாலய தளபாட கொள்வனவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆவணம் கையளிக்கப்பட்டது.

சாய்ந்தமருது ரியாழுல் ஜன்னா வித்தியாலய அதிபர் ஏ.எம். அஸ்தர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவர் சட்டத்தரணி எச்.எம். எம். ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஒரு மில்லியன் ரூபாய்க்கான நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை கையளித்தார்.

No comments: