News Just In

7/10/2024 07:53:00 PM

பணிக்கு சமூகமளித்த ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு!



தொழிற்சங்க பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாமல் பணிக்கு சமூகமளித்த அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் விதம் தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (10) விளக்கமளித்துள்ளார்.

தொழிற்சங்கப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடாமல் கடமையாற்றிய அனைத்து நிறைவேற்று தரமற்ற அரச உத்தியோகத்தர்களுக்கும் விசேட சம்பள உயர்வை வழங்குவதற்கும் எதிர்கால பதவி உயர்வுகளுக்குப் பயன்படுத்தக்கூடிய விசேட பாராட்டுச் சான்றிதழை வழங்குவதற்கும் அமைச்சரவை நேற்று (09) அனுமதி வழங்கியுள்ளது.

''வேலை நிறுத்த நாட்களில்.. மாணவர்கள் பக்கம் நின்று
ஆசிரியர்களுக்கு மட்டும் 3.1 தர ஆசிரியருக்கு, 525 ரூபாயும், 2ம் தர முதலாம் பிரிவு ஆசிரியருக்கு, 1,335 ரூபாயும், சம்பள உயர்வு வழங்கப்படும். முதல் தர ஆசிரியர்களுக்கு 1,630 ரூபாய் சம்பள உயர்வும் ஓய்வூதியம் பாதிக்கப்படாமல் ஊதிய உயர்வும் வழங்கப்படும்" என்றார்.

"அரச துறையின் ஏனைய சிற்றுாழியர்களுக்கும், ஏனையவர்களுக்கும் பணிபுரிந்த அனைவருக்கும் இவ்வாறான சம்பள உயர்வு கிடைக்கும். திறைசேரியில் பணம் இல்லையென்றால், எவ்வளவு போராட்டம் செய்தாலும், எவ்வளவு வேலைநிறுத்தம் செய்தாலும், எவ்வளவு திட்டினாலும் சரி. தேங்காய் அடித்தாலும், யார் கொடுப்பது?" என்றார்.

No comments: