News Just In

6/04/2024 10:17:00 AM

சாய்ந்தமருது பிரதேச பாடசாலைகள், பொது அமைப்புகள், சமய மற்றும் சமூக அமைப்புகளை மேம்படுத்தி வலுவூட்ட ஹரீஸ் எம்.பி நிதி ஒதுக்கீடு !


நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழ் உள்ள பொது நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் பாடசாலைகளுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுக்கான ஆவணம் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்களின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருதில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதாரம் வழங்க தேவையான நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தையும் சாய்ந்தமருது சமூக சேவைக்கான மக்கள் அமைப்பு, மனித அபிவிருத்தி அமைப்பு, டஸ்கஸ் விளையாட்டு கழகம், சன்பிளவர் விளையாட்டு கழகம், களக்ஸ்சி விளையாட்டு கழகம், சாய்ந்தமருது அஸ்ரப் ஐக்கிய விளையாட்டு மைதானம், ஸ்டார் லீடர்ஸ் விளையாட்டு கழகம், நீதிக்கான மய்யம், ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, ஐக்கிய நண்பர்கள் அமைப்பு, கமு/கமு/அல்- ஹிலால் வித்தியாலயம், மஸ்ஜிதுல் குபா பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹஸனாத் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஆரிபீன் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் சபா பள்ளிவாசல், மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல், அனாபா சமூக சேவைகள் நலன்புரி அமைப்பு, ப்ளூமிங் ஸ்ரீலங்கா இளைஞர் கழகம், கிராம அபிவிருத்தி அமைப்பு, ஹுதா பௌண்டஷன், ஜீனியஸ் இளைஞர் கழகம் போன்றவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டு ஆவணத்தை அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களிடம் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார்.

இதன்போது உலமாக்கள், பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீத், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ஏ. வஸீர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளர் எம்.ஐ.எம். பிர்தௌஸ், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்யேக செயலாளர் ஏ.பி. நௌபர், இணைப்பு செயலாளர் சப்ராஸ் நிலாம், மக்கள் தொடர்பாடல் செயலாளர் யூ.எல்.என். ஹுதா உமர், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பாராளுமன்ற உறுப்பினரின் உத்தியோகத்தர்கள், மு.கா பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதானிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: