News Just In

6/06/2024 08:24:00 PM

திராவிட கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ள சீமான்!




இந்தியாவில் நடந்தது முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் வாக்கு வங்கியை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பெருமளவு அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 8.9 வீத வாக்குகளை பெற்று தமிழகத்தின் தேசிய கட்சிகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சி தன்னை நிலை நிறுத்தியுள்ளது.

தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழனை தமிழனாழ வேண்டும் என கொள்கைகளை முன்வைத்து தனது தீவிர பிரசாரத்தை சீமான் மேற்கொண்டு வருகின்றார்.

சீமானின் ஆக்ரோஷமான பிரசாரங்கள், எழுச்சிமிகு உரைகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். மறுபுறம் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இவ்வாறான நிலையில் திராவிட கொள்கைகளுக்குள் சிக்கியுள்ள தமிழக மக்கள் தற்போது அதிலிருந்து விடுதலை பெற எத்தணிக்கும் போக்கினை இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன.

எந்தவொரு கூட்டணியுடன் இணையாமல் தனிக்கட்சியாக போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, பெருந்தொகை வாக்குகளை பெற்றுள்ளமையானது, தமிழகத்தின் திராவிட கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி 8.9 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது.

சீமான் கட்சியின் முன்னேற்றம் குறித்து அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருவதுடன், பலரும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் அபார வளர்ச்சி குறித்து பாராட்டாமல் இருக்க முடியாதென பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்தின் தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார்

No comments: