News Just In

6/29/2024 01:45:00 PM

ஆமணக்கு விதைகளை உண்ட 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி - மன்னாரில் சம்பவம் !



மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் தரம் 4 ஐச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (28) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 4 இல் கல்வி கற்கும் 9 வயதுடைய 8 மாணவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் தரம் 4 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் எண்ணை எடுப்பதற்காக காய வைத்திருந்த ஆமணக்கு விதைகளை பாடசாலைக்கு கொண்டு வந்து சக மாணவர்களுடன் அதை உட்கொண்ட நிலையிலே குறித்த மாணவர்கள் திடீர் சுகயீனமடைந்து உள்ளதாக தெரியவந்துள்ளது .

இந்த நிலையில் குறித்த 8 மாணவர்களும் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments: