News Just In

4/01/2024 03:57:00 PM

லாஃப்ஸ் எரிவாயு விலைகள் தொடர்பில் அறிவிப்பு!



இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைக்க லாஃப்ஸ் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 625 ரூபாவினால் குறைக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,111 ரூபாவாகும்.

அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: