News Just In

3/02/2024 09:56:00 PM

அதிக வெப்பம் : Heat Stroke ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை !




அதிக வெப்பம் காரணமாக ‘ஹீட் ஸ்ட்ரோக்’ (Heat Stroke) ஏற்பட அல்லது நரம்பு மண்டல செயற்பாடு குறைவடைய வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.

நீண்டநேர உடல் உழைப்பு காரணமாக இந்த நிலை ஏற்படலாமென சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல்,தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் மருத்துவர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.

அதிக வெப்பத்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்காக தொடர்ந்து தண்ணீர் அருந்துமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments: