
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை இந்தியாவால் பெற்றுத்தர முடியுமென்ற நம்பிக்கை சாந்தனின் சிறை மரணத்தால் பொய்ப்பித்துள்ளது என வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தின் சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பினால் சாந்தனின் மரணம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வல்வெட்டித்துறைக்கென்று தனிப்பெருமையுண்டு. தீருவிலிற்கு அதனை விட தனித்து பெருமை உண்டு.
இந்திய இலங்கை கூட்டுச்சதியால் படுகொலை செய்யப்பட்ட குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளதும் பின்னராக தளபதி கிட்டு உள்ளிட்ட சக பத்து போராளிகளதும் நினைவுகளை தாங்கி நிற்கின்ற மண் இது.
அக்காலப்பகுதிகளில் அவர்கள் ஞாபகார்த்த நினைவு தூபிகளை நிர்மாணித்த கட்டட ஆச்சாரி தில்லையம்பலம். உதவிக்கு அவரிற்கு நாள் தோறும் சாப்பாடு எடுத்து வந்திருந்தவர் அவரது மகன் சுதேந்திரராசா.
No comments: