News Just In

3/03/2024 09:00:00 PM

சாந்தனின் இறுதி ஆசையை நிறைவேற்றிய சகோதரி: அனைவரிடமும் உருக்கமான கோரிக்கை!



இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டுள்ளது.

அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.

சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

அத்துடன் உயிரிழந்த சாந்தனின் புகழுடல் நாளை திங்கட்கிழமை (04) எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.

மேலும் இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: