News Just In

3/16/2024 01:15:00 PM

மகளிரைக் கௌரவித்து உதவு ஊக்கமளிக்கும் நிகழ்வு!


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி முன்மாதிரியாகத் திகழும் மகளிரைப் பாராட்டி உதவு ஊக்கமளிக்கும் நிகழ்வு ஏறாவூர்ப்பற்று கலாச்சார மத்திய நிலையத்தில் வெள்ளியன்று 15.03.2024 இடம்பெற்றது.

இளைஞர் அபிவிருத்தி அகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அனுசரணையில் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக உதவிச் செயலாளர் நிருபா பிரிந்தன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்வில் சிறந்த சுயதொழில் முயற்சியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட 4 பெண்களும், வறுமைக்குட்பட்ட சூழ்நிலையிலும் கல்வியைத் தொடர்ந்து மருத்துவபீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவி ஒருவரும், ஏசியன் டெயூபோள் சர்வதேசப் போட்டியில் சர்வதேச மட்டத்தில் 3ஆம் இடத்தைத் தனதாக்கிக் கொண்ட வீராங்கனை சங்கர் சக்சனா, ஈட்டி எறிதல் தேசிய மட்டப் போட்டியில் 13ஆம் இடத்தைப் பெற்ற வீராங்கனை, மாவட்ட மட்டத்தில் சேமிப்பில் முதலாமிடம் பெற்ற மாவடிவெம்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் உள்ளடங்கலாக 9 பெண்கள் சிறந்த முன்மாதிரி ஆற்றல் மிக்க மகளிர்களாக மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.

மேலும், பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் முகமாக சிறு கடை வியாபாரம் செய்வதற்கான பொருட்களும் 09 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தலா 10000 ரூபாய் விகிதம் சுழற்சி முறைக்கடன்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்இ தேசிய கல்வியியற் கல்லூரி உப பீடாதிபதி தர்ஷினி சுந்தரராஜன், ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலக கணக்காளர் டிலானி ரேவதன், நிருவாக உத்தியோகத்தர் புஸ்பம் யேசுதாஸன் மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி சந்திரசேகரம், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் ஏறாவூர்ப்பற்று கலாச்சார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி டி. ஜகனிதா, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ. நபீலா, மகளிர் அபிவிருத்தி உதவியாளர் எஸ்.எல். குறைஷா அபிவிருத்தி உத்தியோகத்தர்களான கிருஷாந்தினி மணிவண்ணன், பிரதீபா நெல்சன், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அலுவலர்களான நிறோஜினி விநாயகம்இ லதா ரவீந்திரராஜா உட்பட பிரதேச செயலக சிறுவர், பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள், மகளிர்சங்க உறுப்பினர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு அங்கத்தவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் நடனம், விழிப்புணர்வு நாடகம், பாடல் உட்பட கலை அம்சங்கள் இடம்பெற்றதுடன் நிகழ்வுகளில் பங்கு பற்றித் தமது திறமைகளை வெளிப்படுத்தியவர்களுக்கு இளைஞர் அபிவிருத்தி அகம் அமைப்பினால் பரிசில்களும் வழங்கப்பட்டன.

சுவீடன் சர்வதேச அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு (வீ எபெக்ற்) நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் 2012ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தில் கூட்டுறவுத்துறை சார்ந்த திட்டங்களையும்இ பெண்கள் வலுவூட்டலோடு அபிவிருத்திகளை உறுதிப்படுத்தும் வகையில் பயிற்சிகள்இ செயலமர்வுகள்இ விழிப்புணர்வுகள்இ தொழில்துறை உற்பத்திக் கண்காட்சிகள்இ கற்றல் கள விஜயங்கள்இ பொருளாதார வாழ்வாதார உதவு ஊக்கங்கள் என்பனவற்றை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: