News Just In

2/13/2024 07:48:00 PM

சம்மாந்துறை பிரதேச செயலக உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி!




(சர்ஜுன் லாபீர்,ஐ.எல்.எம் நாஸீம்)

சம்மாந்துறை பிரதேச செயலக நலன்புரி அமைப்பினால் வருடாந்தம் நடத்தப்படும் உள்ளக கிரிக்கெட் சுற்றுப்போட்டி உதவி பிரதேச செயலாளர் யு.எல்.அஸ்லம்(LLB) தலைமையில் இன்று(13)சம்மாந்துறை பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

உத்தியோகத்தர்களுக்கிடையே உடல் ஆரோக்கியத்தையும், மன வலிமையையும், திறன் வளர்ச்சியையும் ஏற்படுத்தும் நோக்கில் வருடாந்தம் நடைபெறும் இப் போட்டி இம்முறையும் சிறப்பாக நடைபெற்றது.

இச் சுற்றுபோட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டதுடன் அணிக்கு 7 பேர் கொண்ட 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக காணப்பட்டது.

இச் சுற்றுப் போட்டிக்கு அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா அவர்களும் மற்றும் அம்பாறை மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர் ஏ.பி சாஹீர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இச் சுற்றுப்போட்டியில் இறுதிப்போட்டிக்கு நிர்வாக கிளையும் வெளிக்கள கிளையும் மோதின.இதில் நிர்வாக கிளை 43 ஓட்டங்களினால் வெற்றி பெற்று இந்த ஆண்டு சம்மாந்துறை பிரதேச செயலக உள்ளக கிரிக்கெட் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.



No comments: