News Just In

12/11/2023 11:49:00 AM

மின்சார கட்டணத்தை குறைக்க திட்டம்!



மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

தற்போதைய மழைவீழ்ச்சி மற்றும் நிலக்கரியின் விலை குறைப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின் கட்டண திருத்தத்தில் மின் கட்டண குறைப்பை எதிர்பார்க்கலாம் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், மின் கட்டணத்தை குறைப்பதில் நம்பிக்கை இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

No comments: