
02 டிசம்பர் 2023க்கான வானிலை முன்னறிவிப்பு!!
01 டிசம்பர் 2023 அன்று மதியம் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது 02 டிசம்பர் 2023 ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து 03 டிசம்பர் 2023 க்குள் மேலும் ஒரு சூறாவளி புயலாக உருவாகும். இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய மாகாணங்களில் பிற்பகல் 01.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
No comments: