News Just In

11/03/2023 10:28:00 AM

பெறுமதி சேர் வரி அதிகரிப்பினை அனுமதிக்க முடியாது : சபாநாயகர் மகிந்த யாபா!




பெறுமதி சேர் வரி(வட்) அதிகரிக்கப்படுவதனை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எரிபொருட்களின் விலைகள் சிறியளவில் அதிகரிப்பதனை மக்களினால் தாங்கிக் கொள்ள முடியும் என்ற போதிலும் பெறுமதி சேர் வரியை அதிகரிக்கும் தீர்மானத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரியை 18 வீதமாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த தீர்மானத்தில் மாற்றம் ஏற்படலாம் எனவும் வரி அதிகரிப்பு தொகையில் மாற்றம் ஏற்படலாம் எனவும் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

No comments: