கடந்த 1882ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர்களது இருப்பு விகிதாசாரம் மற்றும் நிலங்கள் பறிக்கப்பட்டு தற்போது வரை இனச்சுத்திகரிப்பு நடைபெற்று வருகின்றது ” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக்கட்சியின் திருகோணமலை மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” திருகோணமலைமாவட்டத்தில் அரசாங்கம் மற்றும் பல்துறைசார்ந்த நிறுவனங்களால் அத்துமீறிய காணி அபகரிப்புகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ் மக்களின் அடிப்படையான அவர்களின் நிலத்தினை பறித்தல் என்பது அவர்களை வாழவிடாமல் அகற்றுவதற்கான முயற்சி. அந்த முன்னெடுப்புகளில் ஒன்றுதான் காணி அபகரிப்பு மற்றும் தமிழர்கள் பூர்வீகமாகக் கொண்ட காணிகளில் விகாரைகளை அமைத்தல் என்பனவாகும்.
இவைதொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக தாம் கருத்து வெளியிட்டு வருவதாகவும், மேலும் திட்டமிட்ட அபகரிப்புக்கள் தொடர்பிலான பட்டியல் ஒன்றினை நாம் தயாரித்து வருகின்றோம்” இவ்வாறு சிறீதரன் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில்திருகோணமலை மாவட்டக்கிளையின் தலைவர் குகதாசன் மற்றும் செயலாளர் சுரேஸ் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
No comments: