தரம் குறைந்த அல்லது அறிக்கைகள் மூலம் நிராகரிக்கப்பட்ட எரிபொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று மின் சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வலியுறுத்தினாரர்.
எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டை நிராகரிப்பதாக தெரிவித்த அமைச்சர் இன்று (17) பாராளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்..
பெட்ரோலிய சேமிப்பு முனையம் எரிபொருள் இறக்குமதி தொடர்பாக சோதனைகளை நடத்தி சில வழிமுறைகளை வழங்கியுள்ளது. இந்த முறைகளை பின்பற்றி கொலன்னாவ மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கு எரிபொருட்ளை இறக்குவதற்கு கப்பல் நிறுவனங்கள் ஏற்பாடு செய்துள்ளன. ஒரு அமைச்சு மற்றும் ஒரு நிறுவனம் என்ற வகையில் அதன் தரத்தை சரிபார்த்த பின்னரே இவற்றைச் மேற்கொள்கின்றோம் என்பதை நாங்கள் பொறுப்பேற்கின்றோம்.
மேலும், தரக்குறைவான எரிபொருட்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. அதனை முற்றாக மறுக்கின்றேன் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
No comments: