News Just In

11/01/2023 08:06:00 AM

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான செய்தி!

மின்சார கட்டணம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பாடசாலை உபகரணங்களின் விலையை 10% அதிகரிப்பதில் உற்பத்தி நிறுவனங்கள் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் குறித்த நிறுவனங்களை பராமரிப்பதற்கு முடியாதுள்ளதாகவும் நாடளாவிய ரீதியில் தமது உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், எரிபொருட்களின் விலை அதிகரிப்பு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதால் விலையை அதிகரிக்காமல் நிறுவனங்களை நடத்த முடியாதுள்ளதாகவும் உற்பத்தி நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

அரசாங்க பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி நடுப்பகுதியில் தொடங்க உள்ள நிலையில், பாடசாலை உபகரணங்களை வாங்குவதற்கு தயாராகுவர்.

இந்நிலையில், குறித்த தேவையை பூர்த்திசெய்ய உற்பத்தி நிறுவனங்கள் ஏற்கனவே தயாராகி வருகின்றன.

மேலும், கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் குறைந்த விலையில் பயிற்சிப் புத்தகங்களை அச்சிடுவதற்கு மேற்கொண்ட முயற்சி வெற்றியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: