News Just In

11/12/2023 06:39:00 PM

400 ஓட்டங்களை கடந்த இந்திய அணி!



உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்து ஆட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 410 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபடியாக Shreyas Iyer ஆட்டமிழக்காமல் 128 ஓட்டங்களை பெற்றதுடன், KL Rahul 102 ஓட்டங்களையும் பெற்றார்.

பந்து வீச்சில் நெதர்லாந்து அணி சார்பில் Bas de Leede 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.இதன்படி நெதர்லாந்து அணிக்கு 411 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிரண்யிக்கப்பட்டுள்ளது.

No comments: