0

மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் தாக்கியுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள் உள்ளிட்ட பலர் செங்கலடி பகுதியில் பாரிய போராட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு இவர்கள் அதிபர் பயணிக்கும் வீதியில் ஒன்று திரண்டு இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இதன்போது போராட்டத்தில் கலந்துகொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பொலிஸார் தாக்கியுள்ளனர்
No comments: