நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நடந்த உள்நாட்டு இறைவரி சட்டமூலம் மீதான வாக்கெடுப்பின் போதான விவாதத்தில். ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதி (ETF) நிதிகளை உள்நாட்டு கடன் மறுசீரமைப்பிற்குப் பயன்படுத்த அரசாங்கத்தினாலும் மத்திய வங்கியினாலும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரும் தோட்டங்களில் வேலை செய்பவர்கள், ஆடை தொழில்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்கள், குறைந்த வருமானம் பெறும் ஊழியர்கள் இதன் மூலமாக நேரடியாக பாதிக்கப்பட போகின்றார்கள். இவ்வாறு EPF ஊழியர் சேம நிதி மற்றும் ETF ஊழியர் நம்பிக்கை நிதி மீது 14 வீதம் வரி அறவீடு செய்யும் போது தேசிய கடன் மறுசீரமைப்பால் உழைக்கும் மக்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக நாளொன்றுக்கு 900 ரூபாய்களுக்கு நாளாந்தம் வேலை செய்யும் மலையக தோட்ட தொழிலாளர்கள் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை தமது இறுதி சேமிப்பாக கருதுகிறார்கள். இவர்களின் சேமிப்புக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: