News Just In

8/29/2023 07:57:00 AM

அம்மாவுக்காக வேலையை துறந்த மகன் : இலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம்!

புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் தனது தாயைப் பார்க்க அனுமதி வழங்கப்படாமையால் சேவையை விட்டு வெளியேறிய பொலிஸ் அதிகாரி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பயிலுனர் கான்ஸ்டபிள் ஒருவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்க விடுமுறை வழங்கப்படாத காரணத்தினால் பணியிலிருந்து விலகியுள்ளார்.

பொலன்னறுவை, புலஸ்திகம பிரதேசத்தில் வசிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளே இந்த முடிவை எடுத்துள்ளார்.

பணிக்கு வந்து 60 நாட்களாகியும் விடுமுறை எடுக்காமல் தனது கடமைகளை செய்ததாகவும், அதன்போது தனது தாய் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து விடுமுறைக்கு விண்ணப்பித்தும் விடுமுறை வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை அவர் பொலிஸ் தகவல் புத்தகத்திலும் பதிவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலைமையினால் தனது கடமைகளை மேற்கொள்ள மனதளவில் தயார் இல்லையெனவும் அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments: