News Just In

8/22/2023 03:31:00 PM

சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் தேவை !பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்





நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

சிறுவர்கள் வெளிக்கள செயற்பாடுகளில் ஈடுபடும் போது அதிகளவில் வியர்வை வெளியேறுவதால் நீர்ச்சத்து குறைவடையும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்காரணமாக நீர், இளநீர், தேசிக்காய் சாறு, தோடம்பழம், மாதுளம்பழம், ஜீவனி போன்ற நீராகாரங்களை சிறுவர்களுக்கு அதிகமாக வழங்குமாறும் பெற்றோர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments: