News Just In

6/01/2023 04:58:00 PM

வவுனியா முச்சக்கரவண்டி சாரதிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன்




வவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை வழக்கில் சக சாரதிகளான இரு எதிரிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு முதலாம் எதிரியை கொலைக் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

இரண்டாம் எதிரிக்கு எதிராக குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததன் காரணமாக அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைக் குற்றச் சம்பவம் 28.01.2013 வவுனியா - மரக்காரன்படை எனும் பிரதேசத்தில் இடம்பெற்றது.

விலா எழும்பு உடைக்கப்பட்டு, கூர்மை அற்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு 3 வெளிக்காயங்கள் இரு உட்காயங்கள் காணப்பட்ட நிலையில் வீதியில் முச்சக்கரவண்டியுடன் உடல் காணப்பட்டுள்ளது.

இறந்து போனவரும் முதலாம், இரண்டாம் எதிரியும் அன்று இரவு சக சாரதியின் வீடு குடிபுகுதல் விழாவிற்கு சென்றுள்ளமை, நிகழ்ச்சி முடிந்து முதலாம், இரண்டாம் எதிரிகளுடன் இறந்தவரும் இன்னும் இருவர் இறுதியாக நின்றமை, நடுநிசி 12 மணிக்கு இறந்தவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டமை என்பன நிரூபிக்கப்பட்டுள்ளன.

முக்கியமான சாட்டி யாதெனில், மறுநாள் (29.01.2013) காலை 8.30 மணியளவில் முதலாம் எதிரி முச்சக்கரவண்டியுடன் அவரது முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு வந்த போது அவரது முச்சக்கரவண்டியின் முன் கண்ணாடி, பின் இருக்கைகளில் இரத்த சிதறல் காணப்பட்டதை அவதானித்த மற்றுமொரு முச்சக்கரவண்டி சாரதி “இது என்ன இரத்தச் சிதறல்” என முதலாம் எதிரியிடம் வினவிய போது அது தனது கையில் ஏற்பட்ட காயத்தால் வந்த இரத்தம் என முதலாம் எதிரி வித்து னஅவ்விடத்தில் இருந்து தப்பி ஓடி முச்சக்கரவண்டியை கழுவி உள்ளார்

பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்ததை அடுத்து முச்சக்கரவண்டி கழுவப்பட்டிருந்த போதும் 3 இடங்களில் இரத்தத் துளிகள் காணப்பட்டுள்ளன. அதில் ஒன்று எலுமிச்சை பழத்துடன் கட்டப்பட்ட வேப்பிலையில் காணப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் இருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிகள் DNA சோதனைக்கு அனுப்பப்பட்டபோது இறந்தவரின் இரத்தமே முதலாம் எதிரியின் முச்சக்கரவண்டியில் காணப்பட்ட இரத்தம் என சிரேஷ்ட விஞ்ஞானி ரூபான் இளமப் பெரும மரபணு சோதனையை நீதிமன்றில் சமர்ப்பித்து சாட்சியமளித்துள்ளார்.

இதனையடுத்து, முதலாம் எதிரியை கொலைக் குற்றவாளி என இனங்கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

தீர்ப்பளித்த போது இறந்தவரின் உறவினர்கள் மற்றும் முதலாம் எதிரியின் உறவினரின் அழுகைக் குரல்கள் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகளை 15 நிமிடம் ஒத்திவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கை அரச சட்டத்தரணி தர்சிகா திருக்குமரநாதன், அவருடன் அரச சட்டத்தரணி ஆறுமுகம் தர்ஷன் ஆகியோர் சட்டமா அதிபர் சார்பில் குறித்த வழக்கை நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது

No comments: