News Just In

6/01/2023 07:54:00 AM

யாழில் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட இருவரை தட்டிக்கேட்ட மாணவனுக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணம் - வடமராட்சி நெல்லியடிப் பகுதியில் கல்வி பொதுத் சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பாடசாலை மாணவிகளுடன் தகாத முறையில் நடந்துக்கொண்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட பாடசாலை மாணவன் மீது இளைஞர்கள் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்றைய தினம் (31-05-2023) மதியம் நெல்லியடியில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

பாடசாலையில் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் பாடசாலைக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் நின்றுக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர்.

இதேவேளை, பரீட்சை எழுதிவிட்டு வந்த சக மாணவன் இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் முகமாக செய்யப்பட்ட போது இருவரும் மாணவனை தலைக்கவசத்தால் கடுமையாக தாக்கிவிட்டு அவ்விடத்தை இருந்து தப்பியோடியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகளால் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மோட்டார் சைக்கிள் உரிமையாளரை கைது செய்ததுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர்.






அவருடன் சென்ற மற்றைய நபர் தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: