News Just In

6/16/2023 07:43:00 AM

கல்முனையன்ஸ் போரமினால் குடிநீர் இணைப்புகள் கையளிப்பு!

“கல்முனை பிராந்திய மக்களின் அடிப்படை தேவைகளில் தன்னிறைவடைதல்” எனும் கல்முனையன்ஸ் போரமின் இலக்கினை அடையும் முகமாக பல்வேறுபட்ட செயற்றிட்டங்கள் கல்முனையான்ஸ் போரமினால் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அந்த வகையில் தேவையுடைய இணங்கானப்பட்ட 15 பயனாளிக்குடும்பங்களுக்கான குடிநீர் இணைப்புகள் அண்மையில் கையளிக்கப்பட்டிருக்கிறது.

கல்முனையிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் இணைப்பினை கொண்டுசேர்க்கும் நோக்கில் கடந்த 2017ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரமினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட இச்செயற்றிட்டத்தின் கீழ் இதுவரையிலும் சுமார் 135 பயனாளிக் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு கல்முனையன்ஸ் போரமினால் முன்னெடுக்கப்பட்ட கல்முனைக்கான கல்வி, சமூக, பொருளாதார தனிநபர் தகவல் திரட்டின் மூலம் இணங்காணப்பட்ட குடும்பங்களே இச்செயற்றிட்டத்திற்கான பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நூருல் ஹுதா உமர்

No comments: